-துணைக்கு நின்றவர்கள் தப்பியோட்டம்-
-கஜிந்தன்-
துன்னாலைப் பகுதியில் பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நபர் நெல்லியடிப் பொலிஸாரினால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் துன்னாலை காட்டுப்பாகுதியில் நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயெ பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்ப்பட்டுள்ளார்.
இதன்போது அவருடன் துணையாக செயற்பட்ட சில நபர்கள் தப்பி ஓடிய நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் நெல்லியடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இச் சுற்றிவளைப்பில் 50 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு, 7 இலட்சத்து 80 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், தடயப் பொருட்களையும் பருத்திதுறை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















