-செ.கபிலன்-
யாழ்ப்பாணம், பாசையூர் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 109 ஆவது ஜனன தின நிகழ்வு எம்.ஜி.ஆர். சுpலையடியில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எம்.ஜி. ஆரின் 10 அடி சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. இதன்போது 109 பேருக்கு தலா 3, 000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்;கப்பட்டது. ஆத்துடன் 50 வறிய குடும்பங்களுக்கு தலா 5, 000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்;கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் இயற்கை எய்திய பின்னர் 1988 ஆம் ஆண்டு பாசையூரில் எம்.ஜி.ஆர.; நற்பணி மன்றத்தினால் எம்ஜிஆரின் சிலை அமைக்கப்பட்டது.
109 ஆவது ஜனன தின நிகழ்வுக்கு ஐரோப்பிய தமிழர் எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம், பிரான்ஸ் மக்கள் படை ஆகியன நிதி உதவி வழங்கின.


















