-அன்ரனி திலக்-
வடமராட்சி கிழக்கு, குடத்தனை வலிக்கண்டி பகுதியில் நேற்று காலை இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவர் காயமடைந்தனர்.
இதில் காயமடைந்த மூவர் அப்பகுதியிலிருந்தவர்களின் முயற்சியினால் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தையடுத்து அவ்விடத்துக்கு வருகை தந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்;.


















