-இ.கலைஅமுதன்-
முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட ‘கண்ணம்மா’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நாளை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் படக்குழு உறுப்பினர்கள் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
ஈழப்போராட்டத்தின் பாதிப்பையும் வலிகளையும் வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ்.நகரிலுள்ள ராஜா திரையரங்கில் நாளை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. இத் திரைப்படத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
2ஜே மூவீஸ் தயாரிப்பில் யூட் சுகியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ணபிள்ளை இசையை வழங்கியுள்ளதுடன், படத்தொகுப்பை சிவநேசன் மேற்கொண்டுள்ளார்.
இதில் மூத்த கலைஞர்களான ராஜா மகேந்திரசிங்கம், ஜூட் கொலின்ஸ், சபேசன் சண்முகநாதன், கேப்டன் பாஸ்கரன், சுவிஸ் ரகு, ஜாஸ்மின் (பவுண் அக்கா), ஜீவேஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் பல இளம் கலைஞர்களும் நடித்துள்ளனர் என குறிப்பிட்டனர்.


















