-அன்ரனி திலக்-
பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் நேற்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் பாதையிலன் அருகே, 60மி.மீ. வெடிக்காத இரு குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டதையடுத்து
கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குவருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் குறித்த இடத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன் வெடிக்காத இரு குண்டுகளையும் மீட்டனர்.
குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















