-செ.சுமந்தன்-
வடமாகாண விவசாய திணைக்களம் காலநிலை சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை நோக்கி என்ற கருப்பொருளில் நடாத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விவசாய கண்காட்சி நேற்று ஒட்டுசுட்டானில் முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வடமாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான ஆர்.எச். உபாலி சமரசிங்க கலந்து சிறப்பித்தார். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ச.சிவசிறி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்தநிகழ்வின் போது டித்வா புயல் தாக்கத்தினால் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையளர்களுக்கு இழப்பீட்டு தொகைக்கான காசோலைகள் பிரதி அமைச்சரால் வழங்;கப்பட்டது.
இந்த விவசாய கண்காட்சியை விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பெருமளவானவர்கள் பார்வையிட்டு வருகின்றார்கள். இன்று இரண்டாவது நாளாகவும் இந்த விவசாயக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.


















