-ஊர்காவற்றுறை பிரதேச சபை அறிவிப்பு-
ஊர்காவற்றுறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக காணப்படும் கால்நடைகள் மார்ச் 1 ஆம் திகதி முதல் பிரதேச சபையால் பிடிக்கப்பட்டு உரிமையாளர்கள் மீது தண்டம் அற்றவிடும் நடவடிக்கை முன்னெடுக்கபடவுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபை அறிவித்துள்ளது.
அந்த அறிவித்தலில் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்டபட்ட பகுதிகளில் 2025 ஆம் ஆண்டில் நாய் மற்றும் பூனைக்கடிக்கு இலக்காகி 405 பேர் சிக்கிச்சை பெற்றுள்ளனர். அதேவேளை கட்டாக்காலி கால்நடைகளால் வீதி விபத்துக்கள்ளாகி 50 பேர் வரை சிக்கிச்சை பெற்றுள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் இவற்றை பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் கிராம சேவகர் அலுவலகம், கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் கால்நடைகளை பதிவு செய்யுமாறும் அறிவித்தல் விடுத்துள்ளது.
அதேவேளை உரிமையாளர்கள் தங்களது கால்டநடைகள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் நடமாடுவதை கட்டுப்படுத்துமாறும் மார்ச் மாதம் 1 ஆம் திகதிக்கும் பின்னர் வீதிகளில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக காணப்படும் கால்நடைகள் பிரதேச சபையால் பிடிக்கப்பட்டு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு பதிவு செய்யப்படாத கால்நடைகள் பிரதேச சபையின் சட்ட ஏற்பாடுகளுக்க அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரதேச சபை அறிவித்ததல் விடுத்துள்ளது.


















