-ந.கிருஷ்ணகுமார்-
இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதனால், சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் தனது இல்லத்தில் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவிக்கையில்:
வடகிழக்கில் பெரும் அளவான தமிழ் மக்களுடைய காணிகள் இலங்கை முப்படைகளின் வசம் இருக்கிறது.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு முடிந்தவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இது இவ்வாறிருக்க காணாமல் போனவர்கள் தொடர்பாக இன்றுவரை எந்தவிதமான தகவலும் இல்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்படவில்லையென்பதுடன், திட்டமிட்ட வகையில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எவ்வாறு இலங்கையில் சுதந்திர தினத்தை தமிழர்கள் கொண்டாடுவது?
ஆகவே, இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக தமிழ் மக்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்றார்.


















