-இரு பிரிவுகளும் சம்பியனாகி அசத்தியது-
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிகள் அனுராதபுரம் பகுதியிலுள்ள மைதானங்களில் இடம்பெற்றன.
பெண்களுக்கான தேசிய மட்ட உதைபந்தாட்ட தொடரில் இறுதியாட்டத்தில் 20 வயது பெண்கள் பிரிவில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பெண்கள் அணியும் பொலன்னறுவை றோயல் கல்லூரி பெண்கள் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆட்ட நேரமுடிவில் போட்டி இரு அணிகளும் சமனிலையில் முடிவடைந்தமையால் சமனிலை தவிர்ப்பு உதைமூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

சமனிலை தவிர்ப்பு உதையில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பெண்கள் அணி வெற்றி பெற்று தேசிய சம்பியானகி அசத்தியது.
அதேவேளை 17 வயது பெண்கள் பிரிவின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பெண்கள் அணியும் குருநாகல் மலிகதேவா கல்லூரி பெண்கள் அணிளும் மோதியது.
இப்போட்டியில் ஆட்ட நேரமுடிவில் மகாஜனா அணி 5-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்று தேசியத்தில் சம்பியனாகி அசத்தியது.


















