-புங்குடுதீவு மத்தி வரலாற்று சாதனை-
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய உதைபந்தாட்ட போட்டியில் 16 வயது ஆண்கள் பிரிவில் புங்குடுதீவு மத்திய கல்லூரி அணியை யாழ். வயாவிளான் மத்திய கல்லூரி அணி 2.0 என வெற்றி பெற்று தேசிய சம்பியனாகியது.
தேசிய மட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் அனுராதபுரத்தில் இடம்பெற்றது.

தெற்கின் பலம் பொருந்திய அணிகளை வெற்றி கொண்டு யாழ்ப்பாண மண்ணின் இரு பெரும் திறமைமிக்க அணிகளான புங்குடுதீவு மத்திய கல்லூரி அணியும் வயாவிளான் மத்திய கல்லூரி அணியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
கடந்த ஆண்டும் தேசிய மட்ட இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுத் தனது திறமையை நிரூபித்த வயாவிளான் மத்திய கல்லூரி அணி இவ் ஆண்டும் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தது.
மறுபுறம் தேசிய மட்டப் போட்டிகளில் புங்குடுதீவு மத்திய கல்லூரி வரலாற்றில் முதற் தடவையாக பலம்பொருந்திய பல சம்பியன் அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.
இரு அணிகளும் மோதி இறுதிப் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூரி அணி புங்குடுதீவு மத்திய அகல்லூரி அணியை 2.0 கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது.


















