யாழ்ப்பாணம் – மன்னார் (A32) பிரதான வீதியின் பல்லவராயன் கட்டுசந்தி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதினால், இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதியின் ஒருபக்கத்தில் நெல் உலரவிடப்பட்டிருந்தமை மற்றும் பாதை குறுகியிருந்தமை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது.


















