மட்டக்களப்பில் யானை தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரிலும், கிராமத்திற்குள்ளும் இரண்டு காட்டுயானைகள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் ஊடுருவியது.
இதன்போது வாழைச்சேனை நகரில் ஊடுருவிய போது இடியப்பம் விற்றுக்கொண்டு வந்த 68 வயது மூதாட்டி காட்டுயானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இதேவேளை கிராமத்திற்குள் நுழைந்த 2 காட்டுயானைகள் மேற்கொண்ட தாக்குதலில் மொத்தமாக 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த காட்டுயானைகளை காட்டிற்கு விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்


















