-அன்ரனி திலக்-
பளை பகுதியில் 23 கிலோ கிராம் கேரள கஞ்சா இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
பளை மாசார் பகுதியில் நேற்று முன்தினம் இக் கஞ்சா மீட்டு நடவடிக்கை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பளை இராணுவ அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசார் சோரன்பற்று காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 கிலோ 550 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா பளை பொலிசாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


















