யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் ஒன்றில் முதற்கட்டமாக தானியங்கி இயந்திரம் (ATM) வசதி மற்றும் அடகு கடன் சேவை ஆகியவற்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி குறுநிதி பணிப்பாளர் லால் கருணாதிலக தெரிவித்தார்.
சமுர்த்தி திணைக்களத்தினால் சமுர்த்தி வங்கி மற்றும் வங்கி சங்கங்களுக்கான சமுர்த்தி கடன் வழங்கல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ். மாவட்டத்தில் காணப்படும் 33 சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் சமுர்த்தி வங்கிகளில் ஒன்றில் முதற்கட்டமாக தானியங்கி இயந்திரம் (ATM) வசதி மற்றும் அடகு கடன் சேவை ஆகியவற்றை முன்னெடுக்கும் செயற்பாடுகளை ஏற்படுத்துமாறு யாழ். மாவட்ட அரச அதிபரும் மேலதிக சமுர்த்தி பணிப்பாளர் நாயகமுமான மருதலிங்கம் பிரதீபன் நிகழ்வின் தொடக்கவுரையின் போது கோரிக்கையினை முன்வைத்தார். இதற்கு பதிலளிக்கையிலேயே சமுர்த்தி குறுநிதி பணிப்பாளர் லால் கருணாதிலக இதனைத் தெரிவித்தார்.


















