-சி.ஜெகதீஸ்வரன்-
பருத்தித்துறை நகர்ப்புறத்தில் அமைந்துள்ள பழக் கடைகளில் மருந்து விசிறப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்களை விற்பனை செய்வதாக பொதுமகன் ஒருவரால் பருத்தித்துறை நகரசபையிடம் பொது முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இப்பொது முறைப்பாடு தொடர்பாக பரிசீலனை மேற்கொண்டு உறுதிப்படுத்தியதுடன் ஒரு பழக்கடையில் மருந்துகளுடன் தெளிகருவியும் கைப்பற்றப்பட்ட நிலையில் அக்கடையின் உரிமையாளரிற்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றினால் குறித்த நபருக்கு கடுமையான எச்சரிக்கையுடன் 20,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.


















