-இரவில் வீடு புகுந்து அட்டூழியம்-
-த.சுபேசன்-
சாவகச்சேரி – தபாலக வீதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றது. வீட்டு வளவுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல், வீட்டு ஜன்னல் மற்றும் பொருட்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களை எரித்துவிட்டு தப்பிச் சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியர் ஒருவருடைய வீடு ஒன்றிலேயே இவ்வாறு அசம்பாவிதம் இடம்பெற்ற நிலையில் சாவகச்சேரி, பொலிஸார் மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















