பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதுடன் இதற்கு பதிலீடாக அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடுமாறும் கோரிய பிரேரணை புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் காலை பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற போது சபை உறுப்பினர்களான சிவபாதம் குகனேசன் மற்றும் குமாரவேலு அகிலன் ஆகியோரால் மேற்படி பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.
குறித்த பிரேணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நால்வர் வாக்களிக்காத நிலையில் சபையிலிருந்த மிகுதி 14 பேரும் ஆதரவாக வாக்களித்ததையடுத்து பிரேரணையை நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை சபையின் 3 உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















