-சி.ஜெகதீஸ்வரன்-
நீரிழிவு நோய்க்கு ஒழுங்காக மருந்து எடுக்காததால் கிருமித் தொற்று ஏற்பட்டு ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வள்ளுவர்புரம், தையிட்டி கிழக்கைச் சேர்ந்த தேவராசா சுலக்சிகாஜெசி (வயது-32) என்ற காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி ஆசிரியை ஆவார்.
கடந்த வெள்ளிக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை பலாலி பொலிசார் நெறிப்படுத்தினர்.


















