-பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம்-
-த.சுபேசன்-
கைதடி வடக்கு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளுமாறு வடக்கு ஆளுநர் மற்றும் தென்மராட்சிப் பிரதேச செயலரிடம் சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் க.சிவபாதம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வடக்கு ஆளநருக்கும்; தென்மராட்சிப் பிரதேச செயலருக்கும் கடந்த வார இறுதியில் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கைதடி வடக்கில் குடும்பநல உத்தியோகத்தர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை ஏறத்தாழ 33ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக இடங்களில் மாறி மாறி இயங்கி வருகின்றன.
கைதடி வடக்கில் ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் என்பது மிகவும் அவசியமானது. இதனூடாக கைதடி வடக்கு, கைதடி கிழக்கு, கைதடி மத்தி, கைதடி தென்கிழக்கு அத்துடன் கைதடி தெற்கு, கைதடி மேற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பயனடைவர்.
நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் கைதடி வடக்கு மாதர் சங்க கட்டிடத்தில் பல இன்னல்களும் மத்தியில் தற்காலிகமாக இயங்கி வருகின்றது.
எனவே நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ள தென்மராட்சி பிரதேச செயலர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


















