-சொ.வர்ணன்-
தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடலொன்று யாழ். பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
‘அரச மதமும் தனியார் காணியும்’ எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் தனியார் காணி உரிமைகள் தொடர்பாக எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமை பரிமாணங்கள் விவாதிக்கப்படவுள்ளது.
இதன்போது யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ம.திருவரங்கன், கலாநிதி கு.குருபரன், வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் தையிட்டி விகாரையால் நிலத்தை இழந்த திருமதி. சா.சுகுமாரி ஆகியோர் கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.
மாணவர்கள், கல்வியாளர்கள், ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















