-சொ.வர்ணன்-
யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படுகின்ற பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ. செந்தூரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
குறித்த பிரிமியர் லீக் போட்டிகளில் ஆவரங்கால், அச்சுவேலி, புத்தூர்,அரியாலை, நீர்வேலி மற்றும் வடமராட்சி அணிகளைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குகொள்ளவுள்ளன.
இது இவ்வாறிருக்க,இப்போட்டிகளில் வலிகாமம் மற்றும் தீவகம் ஆகியவற்றின் அணிகளின் வீரர்கள் பங்கு பெற்ற வைப்பதற்கு உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றன என்றார்.
இதேவேளை கிராமங்களில் இருக்கும் கரப்பந்தாட்ட வீரர்களை தேசிய நீதியில் பிரகாசிப்பதற்கு வாய்ப்புகளை இந்த பிரிமியர் லீக் போட்டிகள் உதவுமென சங்கத்தின் செயலாளர் தவபாலன், தெரிவித்தார்.
இப்போட்டிகளை எதிர்வரும் மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


















