மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரவானி சந்திப் பகுதியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் மாடுகளை கடத்திச் சென்ற சந்தர்ப்பத்தில் காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றது.
இதன்போது சந்தேகநபரால் கடத்தப்பட்ட 9 மாடுகள் மீட்கப்பட்டன.
கைதானவர் 25-30 வயது மதிக்கதக்கவர் என்றும், அவரை அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
குறித்தப் பகுதியில் நீண்ட காலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினால் இந்த அதிரடி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















