-செ.ரவிசாந்-
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகளின் பின் விடுதலையாகி, தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் இரண்டாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வும், வழிபாடும் இன்று சனிக்கிழமை வடமராட்சியில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தின் பின்புறமாகவுள்ள இந்து மயானத்திலுள்ள சாந்தன் துயிலாலயத்தில் நடைபெறவுள்ளது.


















