இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகம் – இராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தனுஷ;கோடி மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இந்திய மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகையும் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.


















