-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணம் காரைநகர் சுற்றுவட்ட வீதியை 117 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் திட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நேற்று காலை மத வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான ச.சிறீபவானந்தராஜா, க.இளங்குமரன், ஜெ.றஜீவன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவகரன், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், காரைநகர் பிரதேச சபை தவிசாளர், காரைநகர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள ஐந்து கிலோமீட்டர் நீள வீதி புனரமைப்பு மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


















