-செ.ரவிசாந்-
தியாகி அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதனை நடாத்துவது குறித்தான கலந்துரையாடல் இன்று மாலை 4.30 மணிக்கு கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர், மாவட்டச் செயலாளர், தொகுதி அமைப்பாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேட்டுள்ளார்.


















