மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சாரசபை முன்மொழிந்துள்ளதாகவும், அது குறித்த இறுதி முடிவை ஏப்ரல் முதலாம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கும்.


















