-க.சபேஷன்-
வெளிமாவட்டங்களில் 8 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தமக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்
வருடா வருடம் இடமாற்ற சபையால் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 01.01.2026 ஆம் திகதியன்று வழங்கவென பட்டியலிடப்பட்ட இடமாற்றங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இது எமது உரிமைகளை திட்டமிட்டு பறிப்பதாக இருக்கின்றது.
நாம் கல்வி அமைச்சின் சுற்று நிருபங்களுக்கு இணங்க எமது சேவைகளை சரியாக செய்து முடித்துள்ளோம்.ஆனாலும் வழங்கப்பட்ட இடமாற்றம் இன்னும் எமக்கு கிடைக்காத நிலை இருக்கின்றது.அரசியலும் அதிகாரமும் எமது நியாயத்தை பறிக்கின்றது.
எனவே துறைசார் அதிகாரிகள் சுயநலவாதிகளின் சதிக்கு இடம் கொடுக்காது எமது உணர்வுகளை மதித்து எமக்கான நீதியை பெற்றுத் தரவேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















