‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு 5 மாதங்களில் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய 3313 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தகவல் வழங்கிய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2025 அக்டோபர் 30ம் திகதி முதல் மார்ச் மாதம் 25ம் திகதி வரையில்,
1,071 கிலோ ஹெரோயின், 1,938 கிலோ ஐஸ், 4,917 கிலோ கஞ்சா மற்றும் 99,454 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 114,000 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 215 பேரின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2026 ஜனவரி 1 முதல் இதுவரை 24 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 1,479 பேர் பல்வேறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர். இதில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 36,815 பேரும், போதையில் வாகனம் செலுத்திய 28,270 சாரதிகளும் அடங்குவர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தேடப்பட்டு வந்த 29 சர்வதேச குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 89 பேருக்கு எதிராக ‘சிவப்பு அறிவித்தல்’ விடுக்கப்பட்டுள்ளது.
2024 முதல் இதுவரை சுமார் 3,313 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசால் முடக்கப்பட்டுள்ளன.


















