-பா.பிரதீபன்-
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 4 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவின் வடக்கு பகுதி கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இழுவை படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களும், இழுவை படகும் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக, யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.


















