-நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா-
-கஜிந்தன்-
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை தொடர்பாக பல தரப்பினரும் பல தடவைகள் என்னிடம் முறைப்பாடு முன்வைத்தனர். இது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் நான் பல தடவைகள் கூறியுள்ளேன் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார்.
காரைநகர் பிரதேச அபிவிருத்த்p ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த வைத்தியசாலையை தரம் உயர்த்தும் போது அங்கே பணி நியமன திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதாவது எத்தனை வைத்தியர்கள் இருக்க வேண்டும், எத்தனை தாதியர்கள் இருக்க வேண்டும், எத்தனை ஊழியர்கள் இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு வந்தால் தான் நாங்கள் சுகாதார அமைச்சரை கேட்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வைத்தியசாலை 24 மணித்தியாலமும் இயங்க வேண்டும் என்றால் ஆகக் குறைந்தது எட்டு தாதியர்கள் அங்கே பணியாற்ற வேண்டும். எனவே அதற்குரிய ஒழுங்குகளைச் செய்ய வேண்டும்.
நாடளாவிய ரீதியில் எல்லா வைத்தியசாலைகளிலும் தாதியர் பற்றாக்குறை காணப்படுகிறது. ஆகவே அதனை நிவர்த்தி செய்த பின்னர் இந்த வைத்தியசாலையை இயங்க வைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.


















