-க.கனகராசா-
சட்டவிரோத மணல் ஏற்றிய கப் ரக வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் நான்கு மணி நேரம் துரத்திப்பிடித்த சம்பவம் வடமராட்சி கிழக்கு, கற்கோவளம் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றது.
கற்கோவளம் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்ந்து, கப் ரக வாகனத்தில் ஏற்றப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அதிரடிப்படையினர் தேடுதல் முன்னெடுத்தனர்.
இவ்வேளையில்; விசேட அதிரடி படையினரைக் கண்ட மணல் ஏற்றிக்கொண்டிருந்தவர் கப் ரக வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் விசேட அதிரடி படையினர் குறித்த வாகனத்தை அதிகாலை 4 மணியளவில் கைப்பற்றிய போதும், சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
கைப்பற்றபட்ட வாகனம் பருத்தித்துறை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடி படையினாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


















