சுகாதார அமைச்சின் வருடாந்த இடமாற்ற நியமத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் ஏழு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றக் கடிதங்களை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேற்படி சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து கடந்த 20 ஆம் திகதி வழங்கியிருந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி க.மகேந்திரன் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி டி.எஸ்.ஜெபரட்ணம் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியாகவும், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி த. சுசிதரன் வேலணை சுகாதார வைத்திய அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர்.
வேலணை சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி அ.ஜெயகுமரன் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி க.இந்திரமோகன் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியாகவும், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி ப.நந்தகுமார் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரியாகவும்,
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி வை.யதுநந்தன் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி சு.மோகனகுமார் சங்கானை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியாகவும், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரியாக பணியாற்றிய வைத்திய கலாநிதி த.துஸ்யந்தன் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர்.

















