• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Tuesday, October 20, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

இந்தியாபாதுகாப்புத்துறையின்அதிகரிக்கும்ஏற்றுமதிவளர்ச்சி..

Yarl Thinakkural by Yarl Thinakkural
October 20, 2026
in இந்தியச் செய்திகள், கட்டுரைகள்
0
இந்தியாபாதுகாப்புத்துறையின்அதிகரிக்கும்ஏற்றுமதிவளர்ச்சி..
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

அ.அன்பழகன்

இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி, கடந்த பத்தாண்டுகளில் பாரிய மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்துள்ளது. இராணுவக்காலணிகள், பாதுகாப்பு உடைகள், பாகங்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் பராமரிப்பு உதவிகள் போன்ற ஒப்பீட்டளவில் குறைந்த மதிப்புடைய பொருட்களே இன்றும் பெரும்பான்மையாக இருக்கும் அதேவேளையில், இந்தியாவின் ஏற்றுமதிப் பட்டியலில் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு தளவாடங்கள், பீரங்கிகள், ரேடார்கள், ட்ரோன்கள் மற்றும் விண்வெளி உப-அமைப்புகளும் உள்ளடங்குகின்றன.

ஆண்டுதோறும் ஆயுத இறக்குமதிக்காக சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டு, உலகின் மிகப்பெரிய பாதுகாப்புப் பொருட்கள் இறக்குமதியாளராக இந்தியாவை பலர் அறிந்திருக்கலாம்.

ஆனால், இந்தியா கடந்த ஆண்டில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஏற்றுமதியை பதிவுசெய்து, சர்வதேச அளவில் பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2024-2025 நிதியாண்டில் சராசரியாக, 2.76 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், 2025-2026 நிதியாண்டில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது ஆண்டிற்கு ஆண்டு 45.29 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

ஒரே ஆண்டில் ஏற்பட்டுள்ள இந்த 1.58 பில்லியன் அமெரிக்க டொலர் உயர்வு என்பது, 2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த பாதுகாப்பு ஏற்றுமதியை விடப்பெரியதாகும். இது சர்வதேசச் சந்தைகளில் இராணுவ உபகரணங்களை விநியோகிக்கும் நாடாக இந்தியாவின் மீது சர்வதேச கவனத்தைத் திருப்பியுள்ளது.

ஏற்றுமதியின் பெரும்பகுதி அரசுக்குச்சொந்தமான பாதுகாப்புத்துறை சார்ந்த அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது மொத்த ஏற்றுமதியில் சுமார் 54.84 சதவீதப் பங்களிப்பை அளித்துள்ளன. அதேவேளையில், வேகமாக வளர்ந்து வரும் தனியார் துறை 1.81 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது சுமார் 45.16 சதவீதப் பங்களிப்பை வழங்கியுள்ளது. அரசாங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு ஏற்றுமதியின் மொத்த அளவு கிட்டத்தட்ட 60 மடங்கு அதிகரித்துள்ளது.

இதற்கொரு உதாரணமாக, 1.7பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகள், பினாகா ரொக்கெட் ஏவுதளங்கள் மற்றும் சுவாதி ரேடார்களுக்காக அர்மேனியா கோரியுள்ளது.

அதேபோல், இந்தியப் பாதுகாப்புப் படைகளில் பத்தாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட பிறகு, ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து உருவாக்கிய மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிநவீன ஏவுகணை அமைப்பான ‘பிரம்மோஸ்’, ஏற்றுமதிச்சந்தைகளைக் இலக்கு வைத்து நகர்த்தப்படுகிறது.

தரை, வாகனம், விமானம் அல்லது போர்க்கப்பலிலிருந்தும் ஏவப்படக்கூடிய இந்த ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் கொள்வனவு செய்துள்ளன. இதன் வெற்றிகரமான செயற்பாடு தென்கிழக்கு ஆசியாவில் பிரம்மோஸின் ஏற்றுமதி வாய்ப்புகளை வலுப்படுத்தியுள்ளதுடன், வியட்நாமுடன் ஒப்பந்தத்திற்கும் இந்தோனேஷியாவுடனான மேம்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் வழிவகுத்துள்ளது.

ஆஷிகா இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸின் சிரேஷ்ட ஆய்வாளரும் பொருளாதார நிபுணருமான ஜோதி குப்தா, குறிப்பிடுகையில், ‘ஏற்றுமதி வளர்ச்சி என்பது மிக உயர்மட்ட மூலோபாயத் தளங்களை விடவும், நடுத்தர அளவிலான, இலகுவில் விரிவுபடுத்தக்கூடிய அமைப்புகளாலேயே அதிகளவில் இயக்கப்படுகிறது. பிரம்மோஸ் மற்றும் ஆகாஷ் போன்ற ஏவுகணை அமைப்புகள் இந்தியாவின் மிகவும் வெளிப்படையான ஏற்றுமதி வெற்றிகளாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில் பினாகா போன்ற பீரங்கி அமைப்புகள், கடற்படைத் தளங்கள் மற்றும் விண்வெளி உப-அமைப்புகளும் சர்வதேசச் சந்தைகளில் வரவேற்பைப் பெற்று வருகின்றன’ என்றார்.

பாதுகாப்பு அரச நிறுவனத்தின் விநியோகச்சங்கிலி மற்றும் செயற்பாட்டு ஆய்வாளரான யாஷ் பட்டீல் கூறுகையில், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி இரண்டு இணையான போக்குகளால் இயக்கப்படுகிறது. அதாவது வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு நேரடியாகப் பாதுகாப்பு தளவாடங்களை விற்பனை செய்தல் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு உற்பத்தி வலையமைப்புகளில் அதிகரித்து வரும் பங்கேற்பு ஆகியவை ஆகும்’ என்றார்.

அத்துடன் ‘2016ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையே கையெழுத்தான ரபேல் போர் விமான ஒப்பந்தம் காரணமாக, பல பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கடமைகள் இருந்தன. இத்திட்டம் இந்திய நிறுவனங்களுக்கு, குறிப்பாக டசால்ட் ஏவியேஷன் மற்றும் சப்ரான் சம்பந்தப்பட்ட ஒத்துழைப்புகள் மூலம் பிரான்ஸ் விண்வெளி நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது. தற்போது நீண்டகால வணிக உறவுகளாகவும் உலகளாவிய விண்வெளி விநியோகச் சங்கிலிகளில் ஒருங்கிணைப்பாகவும் பரிணமித்துள்ளது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி வளர்ச்சியின் அடுத்த கட்டம், இணைப்பு செய்வதில் குறைவாகவும், இயந்திரங்கள், உந்துவிசை அமைப்புகள், இலத்திரனியல் சாதனங்கள், மென்பொருள் சார்ந்த அமைப்புகள் போன்ற உயர் மதிப்பு பாகங்களை உருவாக்குவதில் அதிகமாகவும் தங்கியிருக்கும்.

மூலோபாயக் கண்ணோட்டத்தில், இத்தொடர்ச்சியான விநியோகச் சங்கிலி உறவுகள் இறுதியில் தனிப்பட்ட ஆயுதத் தள விற்பனையை விடவும் மிகவும் நீடித்தவையாக இருக்கும். ஏனெனில் அவை ஒரு ஒற்றை ஒப்பந்தச் சுழற்சிக்கு அப்பாலும் நிலையான ஏற்றுமதித் தேவையை உருவாக்குகின்றன.

அதேநேரம், குறைந்த செலவிலான உற்பத்தி, வளர்ந்து வரும் தனியார் துறை சூழல் அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, வலுவான மென்பொருள் பொறியியல் திறன்களில் இந்தியாவின் பலமான நிலையில் உள்ளது.

இருப்பினும், நீண்ட நேரம் பறக்கும் உயர அமைப்புகள், மேம்பட்ட உணர் கருவிகள், செயற்கைக்கோள் தொடர்புகள் மற்றும் ஏற்றுமதி-நிதி வழிமுறைகளில் முன்னணி ட்ரோன் ஏற்றுமதி நாடுகளை விட இந்தியா இன்னமும் பின்தங்கியுள்ளது.

இது தனது ‘கால பைரவ்’ தந்திரோபாய ட்ரோனுக்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி ஆர்டரைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கொள்வனவுக்கான கேள்வி இந்தியாவால் உருவாக்கப்பட்ட இராணுவ ட்ரோன் தளத்தை உள்ளடக்கிய முதல் முக்கிய சர்வதேச விற்பனைகளில் ஒன்றாகும். இது நாட்டின் ஆளில்லா விமானத்துறையின் வளர்ந்து வரும் முதிர்ச்சியைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

துருவ் திட்டம் மூலம் ஹெலிகொப்டர்களும் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிக்கு பங்களித்துள்ளன. ஏழு ஹெலிகொப்டர்களுக்கான 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளன.

2008 இல் ஈக்வடார் முதலாவது ஏற்றுமதி வாடிக்கையாளராக மாறிய நிலையில் மொரிஷியஸ், நேபாளம் மற்றும் மாலைத்தீவுகளும் கண்காணிப்பு, பயன்பாடு மற்றும் தேடுதல்-மீட்பு பணிகளுக்காக ஹெலிகொப்டர்களை பயன்படுத்த ஆரம்பித்திருந்தன.

சமீபத்திய ஏவுகணை மற்றும் பீரங்கி ஏற்றுமதிகளுடன் ஒப்பிடும்போது மிதமானதாக இருந்தாலும், ஹெலிகொப்டர் விற்பனை உலகளாவிய இராணுவ விமானச் சந்தையில் இந்தியாவின் இருப்பை உறுதிபப்டுத்துவதற்கு உதவியது.

அந்த வகையில் ஏற்றுமதி வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு ஆதரவளிக்கும் மற்றும் உலகளாவிய பாதுகாப்புத் துறையில் போட்டித்தன்மையை அதிகரிக்கும் முதன்மைத் தொழில்நுட்பங்கள், உயர்மதிப்பு உப-அமைப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை இந்தியாவால் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பானது.

Tags: indian newssrilanka Newstamil NewsYarlthinakkural
Previous Post

வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம்: பற்றி எரியும் பிரான்ஸ்

Related Posts

நடிகர் டைகர் ஷெரொப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: கூலிப்படை பொறுப்பேற்பு
இந்தியச் செய்திகள்

நடிகர் டைகர் ஷெரொப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: கூலிப்படை பொறுப்பேற்பு

October 19, 2026
‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!
இந்தியச் செய்திகள்

‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!

October 17, 2026
இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த முயற்சித்த தவெக நிர்வாகி உள்ளிட்ட நால்வர் கைது
இந்தியச் செய்திகள்

இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த முயற்சித்த தவெக நிர்வாகி உள்ளிட்ட நால்வர் கைது

October 17, 2026
டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!
இந்தியச் செய்திகள்

டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!

October 10, 2026
18ஆவது பிரிக்ஸ் மாநாட்டு தவறவிடப்பட்ட வாய்ப்பும் – எதிர்காலப் பாதையும்.
கட்டுரைகள்

18ஆவது பிரிக்ஸ் மாநாட்டு தவறவிடப்பட்ட வாய்ப்பும் – எதிர்காலப் பாதையும்.

October 7, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

September 16, 2026
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
இந்தியாபாதுகாப்புத்துறையின்அதிகரிக்கும்ஏற்றுமதிவளர்ச்சி..

இந்தியாபாதுகாப்புத்துறையின்அதிகரிக்கும்ஏற்றுமதிவளர்ச்சி..

October 20, 2026
வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம்: பற்றி எரியும் பிரான்ஸ்

வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம்: பற்றி எரியும் பிரான்ஸ்

October 19, 2026
நடிகர் டைகர் ஷெரொப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: கூலிப்படை பொறுப்பேற்பு

நடிகர் டைகர் ஷெரொப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: கூலிப்படை பொறுப்பேற்பு

October 19, 2026
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்!

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்!

October 19, 2026

Recent News

இந்தியாபாதுகாப்புத்துறையின்அதிகரிக்கும்ஏற்றுமதிவளர்ச்சி..

இந்தியாபாதுகாப்புத்துறையின்அதிகரிக்கும்ஏற்றுமதிவளர்ச்சி..

October 20, 2026
வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம்: பற்றி எரியும் பிரான்ஸ்

வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம்: பற்றி எரியும் பிரான்ஸ்

October 19, 2026
நடிகர் டைகர் ஷெரொப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: கூலிப்படை பொறுப்பேற்பு

நடிகர் டைகர் ஷெரொப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: கூலிப்படை பொறுப்பேற்பு

October 19, 2026
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்!

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்!

October 19, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • இந்தியாபாதுகாப்புத்துறையின்அதிகரிக்கும்ஏற்றுமதிவளர்ச்சி.. October 20, 2026
  • வன்முறையாக மாறிய மாணவர்கள் போராட்டம்: பற்றி எரியும் பிரான்ஸ் October 19, 2026
  • நடிகர் டைகர் ஷெரொப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: கூலிப்படை பொறுப்பேற்பு October 19, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.