மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை 33 ஆவது நாளை எட்டியுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்குச் சபை மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, பல்வேறு கிராம மக்கள், வர்த்தகர்கள், பொது அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
போராட்டத்தை தொடர்ந்து மன்னார் நகர சுற்று வட்டத்தில் இருந்து ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகம் வரை சென்று, மீண்டும் மன்னார் நகர சுற்று வட்டப் பகுதியை சென்றடைந்தனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

















