குருணாகலில் கொபேய்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெல்லகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொபேய்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும், கொபேய்கனை, மெல்லகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொபேய்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















