முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய ஆடம்பர வீட்டுத்தொகுதிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு – 7 பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர்கள் குடியிருந்த ஏராளமான ஆடம்பர வீட்டுத் தொகுதிகள் தற்போதைக்கு கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், கொழும்பு – 7 கெப்பிட்டிபொல மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதிகளை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
குறித்த பயணத்தில் காவல்த்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


















