நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்களை தினந்தோறும் பரிசோதனைக்குட்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 100 கிலோ மீற்றருக்கு அதிகமான தூரப் பிரதேசங்களுக்கு பயணிக்கும் பஸ்கள் தினந்தோறும் பரிசோதனைக்குட்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் பொறியாளர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.
நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


















