யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஹையேஸ் ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவனை மோதி விழுத்திவிட்டு, அந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இத்தாக்குதலில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

















