கண்டி மாவட்டத்தில் கிராம வீதி அபிவிருத்தி தொடர்பாக ஏழு செயற்திட்டங்களுக்காக ரூபா 257 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கண்டி மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் விவசாய, கால்நடை, நீர்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது. அதன் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மேலும் அங்கு தெரிவிக்கப்பட்டதாவது,
கிராமப்புறப் பாடசாலைகள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுத்துறை போன்றவற்றுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு முன் உரிமை அளிக்கப்படும், மாகாண சபை அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் 5496 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதனூடாக 2467 வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


















