எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் பேருந்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பஸ்ஸை பராமரிக்காமல் வைத்திருந்த குற்றச்சாட்டில் பேருந்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















