93 ஆவது தேசிய மட்ட சிரேஷ்ட மட்ட சேர்ஜோன்ராபற் தடகளப் போட்டிகள் கொழும்பு தியகம சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 8 ஆம் திகதி முதல் இடம்பெற்றுவரும் போட்டிகளில் வடக்குப் பாடசாலை வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று வருகின்றனர்.
அந்தவகையில் முதல் நாள் நிகழ்வில் 20 வயதுப் பெண்கள் பிரிவில் கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியை சேர்ந்த வீராங்கனை ப.அபிசாளினி 3.10 மீற்றர் பாய்ந்து தங்கப்பதக்கத்தையும், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி வீராங்கனை யோ.நிருசா 3 மீற்றர் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வீராங்கனை ம.டர்சனா 2.90 மீற்றர் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை இரண்டாம் நாள் நிகழ்வில் 20 வயது ஆண்கள் பிரிவில் கோலூன்றிப் பாய்தலில் ஸ்கந்தவரோதயா கல்லூரியைச் சேர்ந்த வீரன் ந.டன்ஸ்சன் 4.40 மீற்றர் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், சாவகச்சேரி இந்துக் கல்லூரி வீரன் ச.கயானன் 4.30 மீற்றர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த வீரன் ச.துசாந்தன் 4.20 மீற்றர் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.
ஓரே போட்டியில் முன்று பதக்கங்களையும் வடக்குப் பாடசாலைகள் சுவீகரித்து வடக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


















