புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக வெள்ள அனர்த்தங்களால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்ற பிரதேசங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு அந்தப் பிரதேசங்களின் வடிகான்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் 4.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அண்ணல் நகர் கிராம சேவகர் பிரிவில் 99 மீட்டர் நீளமான வடிகால் கட்டுமான பணி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முகமது கனி தலைமையில் இடம்பெற்றது.

















