கண்டி – நாவலப்பிட்டி நவ குருந்துவத்த தொலபோவல பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நவ குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தொலபோவல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய கணவன் ஆவார்.
உயிரிழந்த கணவனும், மனைவியும் இணைந்து தங்களது தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


















