தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட ஊர்திப் பவனிநேற்று மன்னார் நகரப் பகுதியை வந்தடைந்துள்ளது.

தியாக தீபம் தீலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயகப் பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் மன்னார் மக்களின் அஞ்சலிக்காக நேற்றையதினம் வருகை தந்திருந்தது.
இதன்போது பொது மக்கள், அருட்தந்தையர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் நகர்ப் பிரதான சுற்றுவட்டப் பகுதியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து மன்னார் நகரப் பேருந்து தரிப்பிடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.


















