மொரட்டுவை – எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் இன்று காலை நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
எகொட உயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் உயிரிழந்த நபர் அடையாளம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 50 முதல் 60 வயதிற்கு இடைப்பட்டவர் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


















