பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பொது மலசலகூடத்தை நான்கு மணிக்கு மூடாமல் திறந்து வைக்குமாறு அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான அமர்வில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பொது மலசலகூடம் உடைக்கப்பட்டு, களவாடப்படுவதால் பொது மலசலகூடங்கள் நான்கு மணிக்கு மூடப்படுகிறது.
அதனால் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸார் தங்களின் இயற்கை கடமைகளை முடித்துக் கொள்ள அவஸ்தைப்படுவதோடு, பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதால் அதை இரவும் திறந்து வைக்க வேண்டும் என்றும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார்.

















