பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 58 மாணவர்கள் நேற்று புதன்கிழமை திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது மாணவர்கள் விசேட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவுகளை உட்கொண்டு பாடசாலை நேரம் முடிவடைந்த பின்னர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
வீட்டுக்கு சென்ற பின்னர் சிறிது நேரத்தில் மாணவர்கள் திடீரென சுகயீனமுற்றுள்ளனர்.
இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்திய பரிசோதனையில் உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் திடீரென சுகயீனமுற்றதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பக்கமுன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















