மகாத்மா காந்தி அடிகளாரின் 156 ஆவது ஜனன தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளாரின் நினைவு தூபியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேலும், இலங்கை காந்தி சேவா சங்கத்தினால் வெளியிடப்படும் ‘காந்தியம்’ சிறப்பு மலர் அதன் பிரதம ஆசிரியர் எம்.ஷாந்தன் சத்தியகீர்த்தி அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.




















