ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 4 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.
இயற்கை ஆர்வலரும், விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசியின் நினைவு தினம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதால் இந்நாள் விலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1925 ஆம் ஆண்டில் ஒக்டோபர் 4 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக பிரகடனப்படுத்தபட்டது.
விலங்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் ஆகியவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உலகில் அழிந்துவரும் விலங்கு இனங்களைப் பாதுகாப்பது மனிதர்களதும் கடமையாகும். எனவே விலங்குகளை பாதுகாத்து அவற்றை பராமரிப்போம்.

















